சிவகாசி;
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது காக்கிவாடன்பட்டி. இங்கு
தனியாருக்கு சொந்தமான கிருஷ்ணசாமி பட்டாசு ஆலை உள்ளது. இதன் உரிமை யாளர் ராஜி என்ற ராஜேந்திரன் ஆவார்.

இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். சனிக்கிழமையன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு அறையில் பேன்சி ரக வெடிகளுக்கான மருந்து செலுத்தும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக பட்டாசு
வெடித்தது. இதில், அந்த அறை முழு வதும் தரை மட்டமானது. தகவல் அறிந்து சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயானது மற்ற அறைகளுக்கு பரவாத வகையில் கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் கிருஷ்ணன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாண்டி மற்றும் பொன்னுச்சாமி ஆகிய இரு தொழிலாளர்கள் கடுமையான தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டி
என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

பொன்னுச்சாமி 80 சதவீத தீக்காயங் களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.