சென்னை:
விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலை
உயர்வை வேடிக்கைப் பார்த்து வருகிறது என்று மக்களும் அனைத்துப்பகுதி தொழி லாளர்களும் குமுறலுடன் கூறுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமையன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகள் அதிகரித்து 83.54 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. டீசல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து 76.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருள்களின் விலையை குறைக்கும் வகையில் கலால் வரியை குறைக்க வேண்டும்
என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. ஆனால் கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.