ஜெய்ப்பூர்;
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ‘தூய்மை இந்தியா’ என்று கூறி, ஒரு ஆட்டமே போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி துவங்கி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், பாஜக தலைவர்கள் பலரும் தூய்மை இந்தியா, தூய்மை இந்தியா என்று கதறித் தீர்த்து விட்டார்கள். தூய்மையாக இருக்கும் இடத்தில் இவர்களாகவே குப்பையைக் கொட்டி பின்னர் அதை அள்ளுவது போல புகைப்படம் எடுக்கும் இந்த விளம்பரத் திட்டத்தை மக்கள் விரைவிலேயே உணர்ந்து கொண்டார்கள். உலக நாடுகளிடமும், அதிகமான அசுத்த நகரங்கள் உள்ள நாடு இந்தியா என்று பெயரெடுத்ததுதான் மிச்சம்.இந்நிலையில், எந்த அளவிற்கு உள்ளார்ந்த புரிதலுடன் இந்த திட்டத்தை பாஜக-வினர் மேற்கொண்டார்கள் என்பதற்கு, அவர்கள் ஆளும் ராஜஸ்தான் மாநிலமே ஒரு சாட்சியாகி விட்டது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 21 சதவிகிதத்தை மட்டுமே அந்த மாநிலம் பயன்படுத்தி இருப்பதாக, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) அறிக்கை அளித்துள்ளது.

மேலும், “ராஜஸ்தானில் கழிவுகள் அனைத்தும் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன; 22 உள்ளாட்சி அமைப்புக்களில் 3-இல் மட்டுமே கழிவுகளை நிலத்தில் புதைக்கும் கட்டமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன; கிராமப்புறங்களிலும் இதுவும் இல்லை; 43 பஞ்சாயத்துகளில் 3-இல் மட்டுமே வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன; மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்படாத குப்பைகள் திறந்த வெளியில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சிஏஜி வைத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.