புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுவிற்கு நிர்ணயிக்கப்பட்ட தீக்கதிர் சந்தா இலக்கு நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தெரிவித்திருப்பது: கட்சியின் மாநிக்குழு நிர்ணயித்த தீக்கதிர் சந்தா இலக்கை நிறைவேற்றுவதற்காக கட்சியின் ஒன்றியக் குழுக்கள், வர்க்க வெகுஜன அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இதனைத் அடுத்து பத்தாண்டு சந்தா-13, ஐந்தாண்டு சந்தா-15, ஆண்டு சந்தா-165, ஆறு மாத சந்தா-16 மற்றும் இதர சந்தாக்கள் என மாநிலக்குழு நிர்ணயித்த சந்தா இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கவிவர்மன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.