லண்டன் கென்னிங்டன் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்ததால்,ரன்களை வாரி வழங்கக்கூடாது என்ற திட்டத்துடன் களமிறங்கினோம்.எதிர்பார்த்தது போலவே எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாகப் பந்து வீசினார்கள்.2-வது சீசனில் நாங்கள் விக்கெட் வீழ்த்தவில்லையென்றாலும், ரன்களை அதிகம் விட்டுக்கொடுக்கவில்லை.நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தாலும் என்னால் நேர்த்தியாகச் செயல்பட முடிந்தது.இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.இங்கிலாந்து அணியின் குக்கும்,மொயின் அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து ஜடேஜா அளித்த பேட்டியிலிருந்து…

Leave a Reply

You must be logged in to post a comment.