தீக்கதிர்

டிரம்பின் ஆலோசகர் கைது…!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து லண்டன் பப் ஒன்றில் கருத்து தெரிவித்து அதுகுறித்த விசாரணைக்கு வித்திட்ட டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

31 வயதாகும் ஜார்ஜ் பாபுடோபுலஸ் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தான் பொய்யால் தவறிழைத்த “தேசப்பற்றுள்ள அமெரிக்கர்” என்று தெரிவித்தார்.கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யாவுக்காக தான் பேச்சுவார்த்தை நடத்திய நேரங்கள் குறித்து எஃப்பிஐ-யிடம் பொய் கூறிவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது குறித்த விசாரணையில் கைது செய்யப்படும் டிரம்பின் முதல் உதவியாளர் இவரே.தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டதாகவும், தன்னை மீட்டுக் கொள்ள இரண்டாவது வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பாபுடோபுலஸ் கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உண்மை வெளியே வருவது முக்கியம் எனவும் பாபுடோபுலஸ் தெரிவித்தார்.சிக்காகோவை சேர்ந்த இவர், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிரம்பின் பிரசாரக் குழுவில் தன்னார்வ வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக சேருவதற்கு முன் லண்டனில் பெட்ரோலிய ஆய்வாளராக இருந்தார்.