சென்னை:
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்
செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோடி அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதார கொள்கையின் விளைவாக பெட்ரோல் – டீசல்- சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாடுமுழுவதும் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துப் பகுதியினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் கொள்முதல் விலை குறைந்திருந்த போதும் மத்தியில் ஆளும் மோடி அரசு விலையை குறைக்காமல் மேலும், மேலும் உயர்த்தி வருகிறது. பாஜக அரசு கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி கொள்ளையடித்து வருகிறது. தமிழக அரசும் தம் பங்கிற்கு வரியை குறைக்காமல் மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது.

இத்தகைய பொருளாதார நடவடிக்கையை எதிர்த்து நாடுதழுவிய அளவில் செப்டம்பர் 10 அன்று இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ள மறியல் போராட்டத் திலும், வேலை நிறுத்தம் உள்ளிட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளில் சிஐடியு முழுமையாக தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

சிஐடியு மாவட்டக்குழுக்கள், சம்மேள னங்கள், மாநில சங்கங்கள், இணைக்கப்பட்ட சங்கங்கள், சாதாரணதொழிலாளர்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள், உழைப்பாளி கள், சிறு,குறு உரிமையாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த போராட்டத் திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.