பனாஜி;
சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 1 கோடியே 44 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு, முதல்வர் மனோகர் பாரிக்கர்தான் பொறுப்பு என்று முன்னாள் பாஜக முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் காட்டிக்கொடுத்துள்ளார்.

கோவா மாநிலத்தில், கடந்த 2014-15ஆம் ஆண்டில் 88 சுரங்கங்களுக்கு உரிமத்தை புதுப்பித்தது தொடர்பாக, கோவா மாநில முன்னாள் பாஜக முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் விசாரணையைச் சந்தித்து வருகிறார். இதுதொடர்பாக லட்சுமிகாந்துக்கும், மூத்த அதிகாரிகள் 2 பேருக்கும் லோக் ஆயுக்தா சம்மனும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், “சுரங்க ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அதனை செய்தது தனக்கு முன்பிருந்த மனோகர் பாரிக்கர் அரசுதான். எனது ஆட்சியில் உரிமம் புதுப்பிக்கப்பட்டது மட்டுமே நடந்தது; இதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?” என்று லட்சுமிகாந்த் பார்சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “மனோகர் பாரிக்கர் ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுப்படியே உரிமம் புதுப்பிக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது என் மீது ரூ. 1 கோடியே 44 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது” என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.