சென்னை;
குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ கொடுத்த ஆவண விவரங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குட்கா முறைகேடு விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக சிபிஐ 35 இடங்களில் சோதனை நடத்தி, கைது நடவடிக்கை மேற்கொண்டது. இதில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த ஆவணங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்புடைய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குட்கா விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத்துறைக்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சி.பி.ஐ அனுப்பியுள்ளது. அந்த ஆவணங்களில் பல்வேறு சொத்து ஆவணங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.