தீக்கதிர்

கிரீஷ் கர்னாட் மீது பெங்களூரு போலீஸில் புகார்..!

பெங்களூரு;
பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில், ஞானப்பீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் “நானும் நகர்ப்புற நக்சல் தான்” என எழுதப்பட்ட அட்டையை தனது கழுத்தில் அணிந்து பங்கேற்றார். இதற்காக அவர் மீது பெங்களுரு காவல்துறையில் அம்ருதேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.