தீக்கதிர்

ஏர் இந்தியாவின் கிளை நிறுவன பங்கு விற்பனை?

புதுதில்லி:
ஏர் இந்தியாவை யாரும் வாங்க தயாரில்லை என்பதால், அதன் கிளை நிறுவனமும் நடப்பாண்டில் 61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ள நிறுவனமுமான ‘ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வைஸ்’ நிறுவனத்தின் பங்குகளை விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல மற்றொரு கிளை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸூம் ரூ. 297 கோடி லாபம் சம்பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.