உயிரோடு இருக்கும் நடிகையை இறந்து விட்டதாக கூறி ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கும் பாஜக எம்எல்ஏவின் செயல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதம். அவ்வப்போது ஏட்டிக்கு போட்டியாக பேசி தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் பாஜக தலைவர்களில் இவரும் ஒருவர் . ஏற்கனவே கடந்த மாதம் காட்கோபார் என் இடத்தில் நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் பேசும் போது, இளைஞர்களை பார்த்து நீங்கள் விரும்பும் பெண்னை, உங்கள் வீட்டிற்கு பிடித்தால் போதும் நான் அந்த பெண்ணை கடத்தி வைந்து கொடுக்கிறேன். பெண்ணின் பெற்றோரை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று பேசினார். இந்த ஆணவ பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மகளிர் ஆணையம் ராம்கதம் எம்எல்ஏவிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே காலமானதாகவும், அவரது மறைவிற்கு இரங்கள் தெரிவிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உயிரோடு இருக்கும் ஒரு நபரை இறந்ததாக இரங்கல் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: