புவனேஷ்வர்:
14-வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கித் தொடர் இந்தியாவில் (ஒடிஷா) வரும் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.குரூப் “சி” பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில்,உலகக் கோப்பை ஹாக்கித் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி (உடை) அறிமுகப்படுத்தப்பட்டது.பல்வேறு நவீன வசதிகளுடன் உடைய இந்திய அணியின் ஜெர்சியை பிரபல ஆடை வடிவமைப்பாளர் நரேந்திர குமார் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: