நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

சனியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்,அர்ஜெண்டினாவின் டெல்போர்ட்டோவை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவிக்க,ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் நகர்ந்தது.முதல் செட்டை 7-6(7-3) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

டெல்போர்ட்டோ.இரண்டாவது செட்டிலும் டெல்போர்ட்டோவின் ஆதிக்கமே தொடர்ந்த நிலையில்,நடாலுக்கு திடீரென முழங்காலில் ஏற்பட,முதலுதவி சிகிச்சையுடன் தொடர்ந்து விளையாடினார்.காயத்தை பொருட்படுத்தாமல் இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய நடால்,டெல்போர்ட்டோவின் அதிரடி ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தச் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்தார்.வெற்றிப்புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது செட்டில் விளையாட வேண்டும் என நடுவர் அறிவித்தார்.

காயத்தின் வீரியம் மேலும் அதிகமானதால் ரபெல் நடால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்க,டெல்போட்ரோ 7-6(7-3),6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்,ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார்.ஜோகோவிச் தனது அதிரடி சர்வீஸ்களால் நிஷிகோரியை திணறடித்தார்.தொடர்ந்து வேகம் காட்டிய ஜோகோவிச் 6-3,6-4,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

அர்ஜெண்டினாவின் டெல்போர்ட்டோ – செர்பியாவின் ஜோகோவிச் மோதும் இறுதி போட்டி திங்களன்று நடைபெறுகிறது.மகளிர் ஒற்றையர்,மகளிர் இரட்டையர்,கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதி ஆட்டத்தின் துவக்க மற்றும் முடிவு நேரத்தைக் கணக்கில் கொண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்ட நேரம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.