ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இந்தியாவிலிருந்து வெளியேறும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டபோது, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதிலொன்று தான், காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ மூலம் 1954-ஆம்
ஆண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப் பட்டதாகும். ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு, தீர்ப்பை 2019 ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள் ளது.இந்நிலையில், மக்கள் ஜனநாயகக்
கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள, அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, “சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370-இன் கீழ் வழங்கப்படும் அதிகாரம் நீக்கப்பட்டால், காஷ்மீர்  நிலம் இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்துள் ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.