தீக்கதிர்

35 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொறையாறு இஞ்சி பக்கோடா..!

தரங்கம்பாடி:
நாள்தோறும் சந்தையில் புதிது புதிதாக தின்பண்டங்கள் விற்பனைக்கு வந்தாலும் பொறையாறு இஞ்சி பக்கோடாவுக்கு இன்றும் பெருமை கூடிக் கொண்டே தான் இருக்கிறது. மருத்துவக் குணம் மிகுந்த மூலப் பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் செய்வதால், உடல் நலத்திற்கு மிக ஏற்றதாக இஞ்சி பக்கோடா இருக்கிறது.

பொறையாறு பகுதி விழாக்களிலும் பண்டிகைகளிலும் விருந்து உபசரிப்பி லும் முக்கிய இடம் வகிக்கிறது இஞ்சி பக்கோடா. நூறு ஆண்டுக்கும் மேலாக மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு மாவட்ட வியாபாரி களும் வாடிக்கையாளர்களும் இஞ்சி பக்கோடா
வை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பட்டை
ஆகிய மருத்துவக் குணமிக்க பொருட்களை உரலில் இடித்து பின் கடலை மாவு,
அரிசி மாவு, மிளகாய் உள்ளிட்ட பொருட்களோடு பக்குவமாக பிசைந்து சுத்த மான சமையல் எண்ணெய்யில் கைகளா லேயே பொரித்து எடுக்கப்படுகிறது. பொரித்த பக்கோடாவை மறுமுறையும் பொரித்தால் தான் முழுமையாக வெந்து இருக்கும்.

ஒருமுறை பயன்படுத்தப் பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. காரம் எண்ணெய்யில் இறங்கி விடுவதால் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது கிடையாது.கை பக்குவமாக எந்தவித கலப்பட முமின்றி மருத்துவக் குணங்கள் நிறைந்தபொருட்களைக் கொண்டு தயாரிப்ப தாலும் சுவையானதாக இருப்பதாலும் முன்கூட்டியே ஆர்டர்கள் செய்து வாங்கிச் செல்கின்றனர். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கவர்ந்த இஞ்சி பக்கோடா ரஷ்யா, அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என 35 நாடுகளுக்கும் மேல் விற்கப்படுவதாக இஞ்சி பக்கோடா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் முகமதுஅலி கூறுகிறார்.

இவரது குடும்பத்தினர் பல தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.நாள்தோறும் சென்னை, திருச்சி விமான நிலையங்களிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் 5க்கும் மேற்பட்ட நபர்களிடமாவது பொறையாறு இஞ்சி பக்கோடா நிச்சயமாக இருக்கும் என
ஜின்னா கூறுகிறார். கடந்த 10 ஆண்டு க்கு முன்பு  கிலோ 200 ரூபாய்க்கு விற்ற
பக்கோடா இன்றும் அதே விலையிலேயே விற்கப்படுகிறது. ஆனால் பக்கோடா தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்தாலும் லாபமே இன்றி யருக்காகவே தொடர்ந்து இஞ்சி பக்கோடா தயாரிக்கப்பட்டு வருகிறது.

செ.ஜான்சன், தரங்கம்பாடி