ஈரோடு,
விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையில் முதல் முறையாக மானியத்துடன் கூடிய முத்ரா கடன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மத்திய ஜவுளி ஆணையக உதவி இயக்குனர் தெரிவித்தார்.

மத்திய ஜவுளி ஆணையக கோவை மண்டலம், பெடக்சில் சார்பில் முத்ரா கடன் பெறுவதற்கான வழிமுறை குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டை அடுத்தகங்காபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய ஜவுளி ஆணையக (விசைத்தறி மேம்பாடு) கோவை மண்டல உதவி இயக்குனர் சுதாராணி பங்கேற்று பேசுகையில், விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையிலும், நிதி உதவி வழங்குவதற்காக பிரதான் மந்திரி கிரிடிட் ஸ்கீம் ஆப் பவர்லூம் விவர்ஸ் என் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் நெசவாளர்களுக்கு கடன் வசதி செய்யப்பட்டு வருகின்றன. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக செயல்படுத்தபடுகிறது. இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. முத்ரா யோஜனா திட்டத்தில், முதல் முறையாக விசைத்தறியாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முகாம் கங்காபுரத்தில் முதன் முறையாக நடக்கிறது. இதில், விசைத்தறியாளர்கள் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்கப்படுகிறது.

கடன் பெற வயது வரம்பு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். கடனை பெற எந்தவித சொத்து பிணையம் மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. ஓபிசி., வகுப்பினர் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 20 ஆயிரம் மானியம் மற்றும் 6 சதவிகித வட்டியை மத்திய ஜவுளி ஆணையகம் சார்பில் செலுத்தப்படுகிறது. மேலும், எஸ்.சி., எஸ்டி., மற்றும் பெண்கள் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, இம்முகாமில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விசைத்தறியாளர்கள் மற்றும் பெடக்சில் சார்பில் சிவராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.