கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்த 40 ஆண்டுகள் பழமையான மெஜெர்காத் பாலம் கடந்த 4-ம் தேதி இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்து 3 வது நாளான இன்று காலை மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகே உள்ள பான்சிடேவா பகுதியில் பிச்லா ஆற்றுப்பகுதியை கடந்து ராகல்கான்ஞ் மற்றும் மன்கான்ஞ் பகுதிகளை இணைக்கும் இப்பாலத்தினை பல தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பாலம் திடீரென அந்த பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது டிரக் ஒன்று சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் இடிந்து விழுந்த பாலத்தை காண அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.