சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.

சென்னை க்ரீன்வேஸ் சாலை யில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். குட்கா  ஊழல் புகாரில் அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு உட்பட 35 இடங் களில் சிபிஐ சோதனை நடத்தி, கிடங்கு உரிமையாளர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளது.

இதில் இரண்டு பேர் சிபிஐ தரப்பு சாட்சியங்களாக மாறியுள்ள னர். இந்த வழக்கில் சிபிஐ தீவிரம்
காட்டி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.