திருப்பூர்,
பல்லடம், பனப்பாளையம் பெருமாள் கோயிலில் வழிபட வந்த பள்ளி மாணவியிடம் அர்ச்சகர் அத்துமீறிய சம்பவத்தால் கோயில் வியாழயனன்று மூடப்பட்டது.

பல்லடம், பனப்பாளையத்தில் 500 ஆண்டு கால பழமை வாய்ந்த காரண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சாமி கும்பிடுவதற்கு 9 ஆம் வகுப்பு மாணவி தனது தாயுடன் கோயிலுக்கு வியாழயனன்று காலையில் வந்துள்ளார். அந்த மாணவியின் தாய் கோயிலுக்கு வெளியே கடையில் பூமாலை வாங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது கோயிலுக்குள் இருந்த மாணவியை கண்ட அர்ச்சகர் வாசுதேவன், மாணவி மட்டும் தனியாக வந்துள்ளார் என நினைத்து அவரை கருவறையின் உள்ளே அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். மாணவி அலறியபடியே வெளியே ஓடிவந்து தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். தகவலறிந்த பனப்பாளையம் பகுதி பொதுமக்கள் அங்கு வந்து வாசுதேவனைத் தாக்கி அவரை வெளியேற்றி கோயிலை பூட்டினர். இச்சம்பவம் குறித்து இந்து அறநிலையத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.