திருநெல்வேலி;
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாணவ, மாணவியர்களிடம் சேகரிக்கப்பட்ட 1.62 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கேரளாவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து லாரிகளை கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையங்கள் இன்று(வெள்ளியன்று) முதல் செயல்படத் துவங்குகிறது. விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் இந்த பயிற்சி நடத்தப்படும். பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும் பயிற்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் வகையில் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும் இதற்கான 3,100 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு எழுத ஆயிரம் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்திலேயே இங்குள்ள மாணவர்களுக்கு தேர்வு மையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகும் ஆசிரியைகள் வட்டார கல்வி அதிகாரி முதல் கல்வித்துறை இயக்குநர் வரை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிக்கலாம். பள்ளி கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வடிடட கசநந என் மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவர்களுடைய புகார்கள் ரகசியம் காக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.