புதுதில்லி :

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் எஸ்சி/எஸ்டி மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடந்த இப்போராட்டத்தினால் பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. பீகார் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அதையொட்டி பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் இரயில் மறியல்களும் நடைபெற்றன.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிபந்தனையில்லா கட்டாய கைது என்ற எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவை மாற்றக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக மசோதா ஒன்றை தாக்கல் செய்து எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவை பாதுகாக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

ஆனால், தற்போது மத்திய அரசு எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதை எதிர்த்து தற்போது போராட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.