தீக்கதிர்

மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு…!

ஈரோடு மாவட்டத்தில் மலைகளில் வாழும் மலையாளி பிரிவினரை பழங்குடி பிரிவில் சேர்க்க வலியுறுத்தி மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜூயோல் ஓரமை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொருளாளர் பி.சடையப்பன், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சி.ராசப்பன், தாயலம்மாள், மாதேஸ் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், மலையாளிகள் என்று சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கான மசோதா நிலுவையில் இருப்பதாகவும், விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.