உடுமலை,
பொது கலந்தாய்வை நேர்மையாக நடத்தக்கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் உடுமலை அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டலத் தலைவர் மு.மதியழகன் முன்னிலைவகித்தார். கிளைத்தலைவர் இரா. இளங்கோ தலைமை வகித்தார். இதில் வரும் 10ஆம் தேதி முதல் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்நிலையில், பொது கலந்தாய்வு நேர்மையாகவும், ஒளிவுமறைவற்ற முறையில் நடத்தப்படவேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மாநிலப் பொதுச் செயலாளர் மீது பொய் புகாரின் பேரில் ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். பேராசிரியர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டிய பணி மேம்பாடடினை உடனடியாக வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நிறைவாக, கிளை பொருளாளர் வேலுமணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 22 பெண் பேராசிரியர்கள் உட்பட 90க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: