சென்னை:                                                                                                                                                                               விவோ புரோ கபடியின் 6-வது சீசன் துவக்க விழா அக்டோபர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு கபடி ரசிகர்களை கவரும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியை தமிழக கபடி முகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,சென்னையில் நடைபெற்ற தமிழ் தலைவாஸ் வீரர்கள் மற்றும் உடை (ஜெர்சி) அறிமுக நிகழ்ச்சியில்,அணியின் கேப்டன் அஜய்தாகூர், தலைமை பயிற்சியாளர் பாஸ்கரன்,தலைமை நிர்வாக அதிகாரி டி சில்வா, திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புரோ கபடியின் 6-வது சீசனின் துவக்கப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அக். 6 அன்று பாட்னா, அக். 7 அன்று உ.பி யோத்தா, அக்.10 அன்று பெங்களூரூ புல்ஸ், அக். 11 அன்று பெங்கால் வாரியர்ஸ் ஆகிய
அணிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி பலப் பரீட்சை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஐய் சேதுபதி, “கபடிக்கென்று தமிழகத்தில் ஒரு செழிப்பான வரலாறு இருக்கிறது.துவக்க ஆட்டத்தின் போது மைதானத்தில் வந்திருந்து தலைவாஸ் அணியினரை உற்சாகப்படுத்துவேன்” என்றார்.(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.