பிரேசிலியா:
பிரேசில் கால்பந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் என்ற தலைமை பொறுப்பைத் தொடர்ச்சியாக ஏற்கமுடியாது.அதாவது கிரிக்கெட் விளையாட்டைப் போன்று கேப்டன் பொறுப்பு நிரந்தரமாக நிலைத்திருக்காது.

சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நட்சத்திர வீரர் நெய்மர் பிரேசில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தாலும் சில்வா,மார்சிலோ ஆகியோர் சுற்றுக்கு ஏற்ப கேப்டனாக களமிறக்கப்பட்டனர்.

இந்நிலையில்,நட்சத்திர வீரர் நெய்மரை பிரேசில் அணியின் நிரந்தர கேப்டன் என்ற புதிய பொறுப்பில் நியமிக்கப்படப் போவதாக அந்நாட்டுக் கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது.
தற்போதைய கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வரும் பிரேசில் அணியின் நெய்மர்,தற்போது ஐரோப்பா கண்டத்தின் கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.