பெங்களூரு,
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூர்  ராம்நகர் போலீசார் நித்தியானந்தாவை கைது செய்து மைசூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகு, நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  இந்நிலையில் இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் நித்தியானந்தா வடமாநிலங்களில் ஆன்மீக சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்றுஅவரின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி  தொடர்ந்து 3 வது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் , நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார்.

Leave A Reply

%d bloggers like this: