ஈரோடு,
பவானி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஜம்பை பேரூராட்சி அருகில் பவானி ஆற்றில் பவானி நகரப் பகுதி முதல் சத்தியமங்கலம் வரை சட்டவிரோதமாக மணல் இரவு பகல் பாராமல் அள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஓரளவு மணல் வந்துள்ளது. இதை சாதகமாக்கிக் கொண்டு மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் சாக்குப் பைகளில் கட்டி இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மணல் கடத்தி வருகின்றனர். இந்த மணல் மூட்டை ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்று வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும், பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. மாறாக, ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளுபவர்களுக்கு ஆதரவாகவே அதிகாரிகள் இருந்து வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜம்பை பகுதியில் பவானி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைக் தடுக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.