கோவை,
முறையற்ற பணியிட மாறுதல்களை கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களின் பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வானது கடந்த ஜுன் மாதமே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதனை முறையாக நடத்தாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் கலந்தாய்விற்கு முன்பே தற்போது 64 பேர்கள் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வை பாரபட்சமின்றி முறையாக நடத்த வேண்டும். இந்த கலந்தாய்வில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், எம்.பில் மற்றும் பி.எச்.டி படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்திவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளியன்று கோவை அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர்வீரமணி தலைமை வகித்தார். கிளைத்தலைவர் ராபர்ட், செயலாளர் ஜெயகுமார், மண்டல செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: