தீக்கதிர்

பணமதிப்பு நீக்கத்தால் குஜராத் சிறுதொழில்கள் கடும் பாதிப்பு : தேனா வங்கி அதிகாரி பேட்டி..!

அகமதாபாத்;
குஜராத் மாநில அனைத்து வங்கிகளின் ஆலோசனைக் கூட்டம், அண்மையில் அகமதாபாத் நகரில் நடைப்பெற்றது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அதில், “குஜராத் வங்கிகளின் வராக்கடன் ரூ. 35 ஆயிரத்து 342 கோடியிலிருந்து ஒரே ஆண்டில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து 342 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5.7 சதவிகித அதிகரிப்பாகும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வராக்கடன் அதிகரிப்புக்கான காரணத்தை, தேனா வங்கியின் தலைமை அதிகாரி ரமேஷ் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். அவர், “இந்த கடன்கள் அனைத்தும் சிறுகடன்களாக அளிக்கப்பட்டவை” என்றும், “அவை வராக்கடன் ஆனதற்கு பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே காரணம்” என்றும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.