தீக்கதிர்

நூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடு பொது நூலகத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை,
நூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடக்கோரி கோவையில் பொது நூலகத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊர்ப்புற நூலகர்களின் கல்வித்தகுதி, பணிநாட்கள், பணிமுறைகளை கொண்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது நூலகதுறையில் பத்தாண்டிற்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணிகாலத்தில் இறக்கும் நூலகர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகனை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் த.இளங்கோ, மாநிலப் பொருளாளர் சு.குணசேகரன், மாவட்டத் தலைவர் எஸ்.மதியரசன், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.