உதகை,
வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வெள்ளியன்று நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டது.

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளியன்று கொண்டு வரப்பட்ட வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். இதன் ஆட்சியர் கூறுகையில். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 1,720 வாக்குபதிவு இயந்திரம் மற்றும் 930 கட்டுப்பாட்டு இயந்திரம் கடந்த 21.06.2018 அன்று வரப்பெற்று கூடுதல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களித்ததை சரிபார்க்கும் கருவி 930 தற்போது பெங்களுர் பெல் கம்பெனியில் இருந்து உரிய பாதுகாப்புடன் வரப்பெற்றுள்ளது. அதனை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்தபிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து சரிபார்த்து, மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ப.செல்வராஜ், தனிவட்டாட்சியர் தேர்தல் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.