சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முழு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அக்கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.