கோவை,
கோவை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையானது பிரான்சு நிறுவனமான சூயஸிடம் 26 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக் குடிநீர் குழாய்கள் அனைத்தும் மூடப்படுவதுடன், குடிநீருக்கான இணைப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அபாய ஒப்பந்தத்தை கண்டித்து வெள்ளியன்று புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பு.இ.மு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளுவன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலரவன் கண்டன உரையாற்றினர். தந்தை பெரியார்திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருட்டினணன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, வழக்கறிஞர் முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: