ஹைதராபாத் :

ஆந்திர மாநிலத்தில் சாலை வசதி இல்லாமல் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக தொட்டில் போன்ற அமைப்பில் தூக்கி செல்லும் வழியிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தின் விஜயநகர மாவட்டத்தில் சாலை வசதி இல்லாமல் நிறைமாத பெண்ணை பிரசவத்திற்காக துணியால் செய்யப்பட்ட தொட்டில் போன்ற அமைப்பில் பெண்ணின் உறவினர்களே தூக்கிச் சென்ற அவலம் நடந்துள்ளது. சுமார் 7 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற வழியிலேயே அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. இது கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு ஆபத்தானது என்றாலும் அம்மக்களுக்கு வேறு வழி இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி இதேபோன்று ஒரு பெண்ணை 12கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி வந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: