திருப்பூர்,
கேரள வெள்ள பேரிடரில் சிக்கிய மக்களுக்கு நிவாரண நிதியும், பொருளும் அள்ளிக் கொடுத்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் பல்வேறு அமைப்பினருக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடிதம்: 100 ஆண்டுகள் காணாத மழை வெள்ளப் பெருக்கு காரணமாக கடும் பாதிப்புக்கும், இன்னலுக்கும் ஆளாகி ஏராளமான உயிரிழப்புகளும், படுகாயங்களும் அடைந்த கேரள மக்களுக்கு தன்னியல்பாக சகோதார உணர்வோடு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பொருளாக, நிதியாக அனைத்து விதத்திலும் உதவி செய்த அனைத்துப் பகுதி மக்களுக்கும் நன்றியை உரிதாக்குகிறோம். அனைத்து அரசியல் இயக்கங்கள், பனியன் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மாவட்ட, வட்டார அரசு நிர்வாகங்கள், ஆசிரியர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டு அனைத்து தரப்பினருக்கும், காலத்தில் செய்த உதவி ஞாலத்தின் மானப் பெரிதாக சாதி, மதம், இனம், மொழி கடந்து மனிதநேயம் விதைத்த இந்த மகத்தான பணியை அன்புடன் வரவேற்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதாக செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.