மன்னார்குடி

திருச்சி லால்குடி விருத்தாச்சலம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாந்துரை ரயில்
நிலையத்திலும், விழுப்புரம் திருப்பதி காட்பாடி மார்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தெளி ரயில்நிலையத்திலும், மன்னார்குடி திருவாரூர் மயிலாடுதுரை மார்கத்தில் இயக்கப்படும் ரயில்கள்  மங்கநல்லூரிலும் விழுப்புரம் மதுரை மார்கத்தில் இயங்கும் ரயில்கள் மேப்புலியூரிலும்,
மயிலாடுதுரை தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் மல்லியம்
ரயில் நிலையத்திலும், நாகூர் திருச்சிராபள்ளி மற்றும் மன்னார்குடி வழித்தடத்தில் இயங்கும்
ரயில்கள்மாரியம்மன் கோயிலிலும் காட்பாடி விழுப்புரம் திருப்பதி மார்க்கத்தில் இயக்கப்படும் எல்லா ரயில்கள் முகையூர் ரயில் நிலையத்திலும் இனி நிற்காது. இந்த ஏழு ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின்  ஆகஸ்ட்
மாத அறிவிப்பு தெரிவிக்கிறது.. இதன் பொருள் இந்த நிலையங்கள் சென்ற மாதத்திலிருந்து
இழுத்துமூடப்பட்டுவிட்டன என்பதாகும் இந்த ரயில் நிலையங்களிலிருந்து ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என்றும்  இன்னும் பல ரயில் நிலையங்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு
வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இப்படி எதிர்காலத்தில் கிராமத்து ரயில் நிலையங்கள்  நிரந்தரமாககாணாமற்போகும் அபாயம் உருவாகி வருகிறது. இந்த ரயில்நிலையங்களை  கொண்டு வருவதற்கு  சுற்றுவட்ட கிராம மக்களின் முயற்சிகள் போராட்டங்கள் அளவிட முடியாதவை. அந்தமக்களின் மலியான ரயில் போக்குவரத்தை மோடி அரசு இன்று பறித்து  வருகிறது.
மோடி – ஜெட்லி கூட்டணியின் கைங்கரியத்தால்  ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை  உயர்ந்துவருகிறது. மன்னார்குடி பெட்ரோல் பங்க் ஒன்றில்  ஒரு மோட்டார் சைக்கிளிஸ்ட்
எதா்த்தமாக ஜோக்கடித்தார். இன்று விலை பெட்ரோல் 82.32 இது ரூ.100 ஐ தொடுவதற்கும்
மோடி  பதவியிலிருந்து மூட்டை கட்டுவதற்கும் சரியாக இருக்கும் என்றார்.  அப்படி நடந்தால் உன் வாய்க்கு தேடிவந்து சர்க்கரை போடுறேன் என்றார் மற்றொருவர். அந்த பெட்ரோல் பங்க்கே சிரித்தது. சாலைபோக்குவரத்து பேருந்து பயணம்  ஏழைகளுக்கும்
தொழிலாளிகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நாளுக்கு நாள் மிகப்பெரும் சுமையாக மாறி
வருகிறது. இந்நிலையில்  ஏழை எளிய கிராமத்து மக்கள்நம்பியிருப்பது ரயில்களின் முன்பதிவில்லாத
பொதுப்பெட்டிகளைதான். அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறது மோடிஅரசு. பெட்ரோல் டீசல்
பொதுப் போக்குவரத்து இவைகளை லாபம் தரும்தொழில்களாக பார்த்தால் அந்த நாடு
முன்னேற முடியாது என்ற உண்மை இந்த காவியிஸ்ட் பிருகஸ்பதிகளுக்கு உறைக்கவில்லை. இப்படி கிராமத்து ரயில்நிலையங்கள் காணாமற்போகும்அபாயத்தைப் பற்றி் டிஆர்இயு உதவி பொதுச் செயலாளர் டி. மனோகரனைக் கேட்டபோது இந்த ரயில் நிலையங்களின் ஊழியர்களை திரும்பப்பெற்றுவிட்டு ஒப்பந்ததாரர்களை நியமித்திருந்தது.ரயில்வே நிர்வாகம். டிக்கெட்
விற்பனையில்  கிடைக்கும் கமிஷன் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்பதற்காக
ஒப்பந்ததாரர்கள் விலகிவிட்டார்கள். எனவேதான் இந்த முடிவிற்கு ரயில்வேநிர்வாகம்
வந்துள்ளது. திருமதிக்குன்னம் குடிக்காடு சிக்கல் உள்ளிட்ட திருச்சிக் கோட்டத்திற்குட்பட்ட
மேலும் ஆறு ரயில்நிலையங்களில் டிக்கெட் விற்பனை செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் யாரும் காண்ட்ராக்ட் எடுக்கமுன் வரவில்லை. இந்த ரயில் நிலையங்களும் மூடப்படும் நிலை உருவாகி வருகிறது. இந்தியா முழுவதும் இதேநிலைதான்.  கிளர்க்இன்சார்ஜ் நிலையங்களாக மாற்றி நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல்
காண்ட்ராக்ட்விட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது   ரயில்வே போக்குவரத்து என்பது
மக்களுக்கான  சேவை என்றநிலையிலிருந்து வருமான நோக்கத்தில் மத்தி்ய அரசு
செயல்படுவதால்தான் இந்த உருவாகிவருகிறது டி. மனோகரன் கூறினார். கிராமத்து ரயில்
நிலையங்கள் மூடப்படுவதால் ஏழை எளியமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்ள என்பதற்கு மாரியம்மன்கோயில் ரயில்நிலையமே எடுத்துக் காட்டு. பங்குனி சித்திரை ஆடி ஆவணி
மாதங்களில்  தஞ்சை மாரியம்மன்கோயிலுக்குநாகூரிலிருந்தும் அதற்குஅப்பாலும்,
எதிர்திசையில் திருச்சியிலிருந்தும் அதற்கு அப்பாலும்  நகரங்கள் கிராமங்களிலிருந்து
ஏராளமான ஏழை  எளிய மக்கள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலுக்கு எளிய
கட்டணத்தில் ரயிலில் வந்து நேர்த்தி கடன் செலுத்திவிட்டு செல்வார்கள். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மன்கோயில் ரயில் நிலையத்தில் குடும்பம்குடும்பமாய்
குழந்தைகளுடன் வந்திறங்கும் மக்கள் எண்ணிக்கை ஏராளம்.  கொயிலுக்குச் சென்று விட்டு திரும்ப ரயில் நிலையத்திற்கு வந்து திரும்பிச் செல்லும்
அம்மக்களின் வாழ்வியல்அனுபவத்தை அநியாயமாய் மோடி அரசு பறித்துள்ளது. மொத்தத்தில் சிக்கனச் சீரமைப்பு என்ற பெயரில் கிராம ரயில்நிலையங்களை கட்டங்கட்டமாக  பிஜேபி அரசு மூட முடிவு செய்துள்ளது. பெருகி வரும் ஏழை எளிய மக்களின் இந்த வயிற்றெரிச்சல்
கோபங்கள் அக்கினிக்குழம்பாய் மாறி   2019 மே தேர்தலில் பிஜேபி அரசை  சுட்டெறிக்கப்போகிறது என்பது சர்வ நிச்சயம்.

நீடா சுப்பயைா

Leave a Reply

You must be logged in to post a comment.