பெங்களூரு;
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடகம் நிறுத்தியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகத்தின் அணைகள் நிரம்பின. அணைகளிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் மேலாக நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் நான்கு முறை நிரம்பியது. இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளியன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 6 ஆயிரத்து 800 கனஅடி நீர்திறக்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.