தீக்கதிர்

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் ஹசரிகாவுக்கு தங்கம்…!

சங்வான்:
தென்கொரியாவின் உள்ள சங்வான் நகரில் நடைபெற்று வரும் 52-வது உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்திய வீரர் ஹரிடே ஹசரிகா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தத் தொடரின் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு (ஆடவர்-ஜூனியர்) இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹரிடே ஹசரிகா மற்றும் ஈரானின் அமீர் நீக்கௌன் ஆகியோர் தலா 250.1 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால் சூட்-ஆப் முறை பயன்படுத்தப்பட்டது. சூட்-ஆப் முறையில் இந்திய வீரர் ஹரிடே ஹசரிகா 10.3 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.ஈரானின் அமீர் நீக்கௌன் (10.2) வெள்ளிப்பதக்கமும்,ரஷ்யாவின் சமக்கோ வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
தங்கம் வென்ற இந்திய வீரர் ஹரிடே ஹசரிகாவுக்கு 16 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.