டேராடூன்,
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 21 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: