திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பகுதியில் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் முறையற்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி சிஐடியு திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோமொபைல் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று காவல் கண்காணிபாளரிடம் மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலை தாலுகா பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவல்துறையினர் சிறிய அளவிலான விதிமீறலுக்கு கூட பெரிய அளவிலான அபராதங்கள் வசூலிக்கின்றனர். மேலும், ஸ்பாட் பைன் போடும்போது ரசீது கொடுப்பதில்லை. இதில் ரசீது கேட்பவர்களை மிரட்டலுக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதமான ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். இந்நிலையில் ஓட்டுநர்கள் ஆர்டிஒ அலுவலகத்திற்கு சென்று கேட்டால், காவல் நிலையம் செல் என்று அலைகழிக்கப்படுகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான ஓட்டிநர்கள் உரிமம் இன்றி கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் ஓட்டுநர்களின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவேட்டில் பதிவு செய்யும் பொழுது ஓட்டுநர்கள் செய்த விதிமீறகள் தெளிவாக குறிப்பிடாமல் மாற்றிபதிவு செய்துகின்றனர். அதற்கான அபராதங்களை வசூலிக்கும் போது ஓட்டுநர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். இதனால் ஓட்டுநர்கள் மிகவும் அச்சத்துடன் பணி செய்யும் சூழல் உறுவாகியுள்ளது. எனவே, காவல் கண்காணிப்பாளர் தலையீடு செய்து இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். பறிமுதல் செய்த நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் உரிமத்தை திரும்ப தர ஆவணம் செய்யவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் திரளான ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.