வாஸிங்டன் டி.சி :

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

இப்போட்டியில் ஒசாகா அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸை 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் 6 முறை அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் வென்ற பிரபல அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை ஒசாகா எதிர்கொள்ள இருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: