நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

வெள்ளியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,லாத்வியா நாட்டைச் சேர்ந்த செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்த செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் செவஸ்டோவாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கீஸ் ஜப்பானின் ஒசாகாவை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒசாகா 6-2,6-4 என்ற நேர் செட்டில் கீஸை எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒசாகா பல முன்னணி நட்சத்திரங்களை வீழ்த்தி யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது டென்னிஸ் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – ஒசாகா (ஜப்பான்) மோதும் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி ஞாயிறன்று (அதிகாலை 1:30 மணிக்கு – இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.