பெங்களூரு;
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் ‘ககன்யான் (Gaganyaan)’ பணிக்குழுவை வியாழக்கிழமை பெங்களூருவில் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இஸ்ரோவின் இப்பணிகள் குறித்து கடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் ஜீன்யூவிஸ் லீ கால் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

‘‘ரஷ்யா, இங்கிலாந்து சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாடு என்ற பட்டியலில் அடுத்ததாக இந்தியாவை சேர்க்க முயற்சிக்கும் இஸ்ரோவின் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இஸ்ரோ மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சிஎன்இஎஸ் (CNES) ஆகியவை விண்வெளியில் மருத்துவம், கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளி குப்பைகளை பராமரிப்பது மற்றும் சுய சுகாதார முறைகள் குறித்து இருநாட்டு விண்வெளி நிபுணர்களிடமும் ஆலோசித்து இணைந்து செயல்படுத்தப்படும்” என பிரான்ஸ் நாட்டு விண்வெளி நிறுவன தலைவர் கால் கூறினார்.
(பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.