சேலம்,
சேலத்தில் வீட்டமனையை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருபவர் சவுந்திரராஜன். இவர்வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைர்ந்த இந்திராணி என்பவருக்கு சொந்தமான வீட்டுமனைகளை அளக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் இந்திராணி புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தலின்படி ராசாயனம் தடவிய பணத்தை சவுந்திரராஜனிடம் இந்திராணி வழங்கினார். அப்போது, அங்கிருந்த லஞ்சஒழிப்பு காவலர்கள் சவுந்திராஜனை கையும்,களவுமாக பிடித்தனர். இதன்பின் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.