நாமக்கல்,
குமாரபாளையம் நகரப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது, லாட்டரி, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரம் முழுவதும் தடைசெய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போதை மாத்திரைகள், பான்மசாலா மற்றும் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடை செய்யக்கோரி வியாழனன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினர் நிர்வாகிகள் நேரில் சென்று மனு அளித்தனர். முன்னதாக, அனைத்து கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்கட்டமாக புகார் மனு அளிப்பது என்றும், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.