திருவனந்தபுரம்;
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலை, பாஜக-வில் இணைக்க ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது; அவர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று கேரளத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதேகாலத்தில் மோகன்லால் தில்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்ததால், ஆர்எஸ்எஸ் பிரமுகரின் தகவல் உண்மை என்றே பரவலாக நம்பப்பட்டது. இந்நிலையில், பாஜக-வில் இணைவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, மோகன்லால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

“எனது அறக்கட்டளை நடத்தும் விழாவில் பங்கேற்குமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கவே அவரைச் சந்தித்தேன்; மற்றபடி திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் நான் போட்டியிடுவது பற்றி எனக்கு எவுதம் தெரியாது; இதுபற்றி கருத்துச் சொல்லவும் விரும்பவில்லை” என்று ஆவேசப்பட்டுள்ளார்.மேலும், “என்னை, எனது பணியைச் செய்ய விடுங்கள்” என்றும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.