சென்னை,
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார். அவருக்கு வயது80.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி கிராமத்தில் பிறந்தவர் சுப்பையா. திரைப்பட ஆசையில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், செந்தில், கவுண்டமணி, வடிவேல் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா.  சுப்பையா என்ற பெயரில் அதிகமாக நடிகர்கள் இருந்ததால் தனது பெயரை வெள்ளை சுப்பையா என்று மாற்றிக்கொண்டார். ‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி’ என்ற பாடலில் ஆடி பாடி நடித்து கலக்கினார். சில ஆண்டுகாலமாக நடிக்க வாய்ப்புகள் இல்லை. அதனால் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். கழுத்தில் புற்றுநோய் கட்டி வந்ததால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டார்.  நோயின் தாக்கம் அதிகமான நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை(செப்.6) காலமானார். வெள்ளை சுப்பையா மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையில் பார்க்கும் சிரிப்பு நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.