தீக்கதிர்

நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா தர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை,
நீர்நிலையில் ஆக்கிர மித்த நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடி யாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனா வரத்தில் குளத்தை ஆக்கிர மித்து வீடு கட்டியவர்கள், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தனர்.  இந்த வழக்கு வியாழனன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழங்கிய தீர்ப்பில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கொடுங்குற்றம். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து இரண்டு வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி 8 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு களை அகற்றாத அதிகாரிகள் மீது சென்னை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்று வதுதான் அதிகாரிகளின் முக்கியப் பணி என்று நீதிபதி குறிப்பிட்டார்.