தமிழகம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீக்கதிர் சந்தாக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, கட்சியின் தலைவர்கள் உள்பட அனைத்து தோழர்களும் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கட்சியின் தேனி மாவட்டக்குழு தனது இலக்கை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி புதனன்று தேனியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா வழங்கும் விழாவில் 385 சந்தாக்களுக்கான தொகை ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்தை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியனிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.ஆர்.சங்கரசுப்பு வழங்கினார். மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மூத்த தலைவர் கே.ராஜப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.